பிரதான மார்க்கமாக செல்லவுள்ள புகையிரதங்கள் தாமதம்!
Colombo
Kandy
Sri Lanka Railways
Train Crash
Department of Railways
By Kathirpriya
கம்பஹா, தரலுவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்றில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கி பயணிக்கும் செங்கடகல மெனிகே புகையிரதத்திலேயே இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக புகையிரத இயந்திரத்தில் இருந்து அதிகளவு எண்ணெய் கசிவதாகவும் கூறப்படுகிறது.
ஒரே தண்டவாளத்தில் பயணிப்பதாக

இதன் காரணத்தால் பிரதான வழியாக செல்லும் அனைத்துப் புகையிரதங்களும் ஒரே தண்டவாளத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப் பணிகள் முடிந்து புகையிரதம் சீரமைக்கப்படும் வரை பிரதான மார்க்கத்தினூடாக செல்லும் அனைத்து புகையிரதங்களும் தாமதமாகவே செல்லும் எனவும் குறிப்பிடப்படுகிறது.