நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பு: நாடு திரும்பிய பந்துல
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கா சென்றிருந்த பந்துல குணவர்தன நாடு திரும்பியுள்ளார்.
உலக வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் வோசிங்டனுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை (20) இரவு நாடு திரும்பியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ள தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் நாடு திரும்பியுள்ளேன் என்றார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு இன்று(21) ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்காக வெளிநாட்டில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் இன்று காலைக்குள் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |