போக்குவரத்து அமைச்சர் ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக இந்திக குற்றச்சாட்டு

Bandula Gunawardane Sri Lanka
By Beulah Sep 17, 2023 12:58 AM GMT
Report

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகத்துறை அமைச்சு உள்ள காரணத்தால் அவர் தனக்கு ஏற்றாட் போல் ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் என புகையிரத சேவையை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முழு அரசியலிலிருந்தும் விலக தயார்: பந்துல குணவர்தன சவால்

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முழு அரசியலிலிருந்தும் விலக தயார்: பந்துல குணவர்தன சவால்

ஆதாரங்கள்

“போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இந்திய நிறுவனத்திடம் 5 கோடி ரூபா இலஞ்சம் பெற்றார் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

போக்குவரத்து அமைச்சர் ஊடகங்களை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக இந்திக குற்றச்சாட்டு | Bandula Intika Totankoda Sri Lanka

இவரை போக்குவரத்து அமைச்சு பதவியில் இருந்து நீக்கி, உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு அதிபரிடம் வலியுறுத்தவுள்ளோம்.

அவருக்கு எதிராக நான் குறிப்பிட்ட விடயங்களுக்கு ஊடகங்கள் கவனம் செலுத்த கூடாது என அவர் ஊடகங்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

புகையிரத பாதை அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இந்திய நிறுவனம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு 5 கோடி ரூபா இலஞ்சம் வழங்கியதாக நான் முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து கலக்கமடைந்துள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தன எப்படிப்பட்டவர் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை.

சாட்சியங்களுடன் தான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தேன்.எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்பேன்.

தனது அரசியல் அந்தஸ்த்தை பயன்படுத்தி தனது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடுவது அடிப்படையற்றது.

இவரது மூத்த மகன் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,ஊடகத்துறை அமைச்சின் தனிப்பட்ட செயலாளராக பதவி வகிக்கிறார்.மகள் அமெரிக்காவில் உள்ள இலங்கைக்கான தூதரகத்தில் மூன்றாம் நிலை அதிகாரியாக உள்ளார்.

இவ்வாறு மருமகன்,மைத்துனன் என அனைவருக்கும் அரசாங்கத்தில் உயர்மட்ட பதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.

புகையிரத சேவையை தனியார் மயப்படுத்த இவர் அதிக அக்கறை கொண்டுள்ளார்.மறுசீரமைப்பு திட்டங்கள் தொடர்பில் தொழிற்சங்கத்தினருடன் கலந்துரையாடவில்லை.

புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்னெடுக்கும் முறையற்ற செயற்பாடுகளை எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி