மக்கள் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்! பந்துல குணவர்தன தகவல்
“எத்தியோப்பியா மற்ற நாடுகளைப் போல் இல்லாமல் ,வாரத்திற்கு ஒரு முறை எரிவாயு, வாரத்திற்கு இரண்டு முறை பெட்றோலை விநியோகிக்கின்றது. அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கு சிறிலங்கா மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்..
சிறிலங்கா மட்டுமன்றி முழு உலகமும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்திலும் மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளார்கள்.1930 களில் இருந்து உலகம் எதிர்கொள்ளும் மோசமான பொருளாதார நெருக்கடி இதுவாகும் என்றும் கூறினார்.
மேலும், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகளின் பேராசையே காரணம் எனவும் சுட்டிகாட்டினார்.
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை தீர்ப்பதற்கு 2006 ஆம் ஆண்டு முதல் முயற்சிகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.