பங்களாதேஸில் முதல் முறையாக தீயணைப்பு படை வீராங்கனைகள் நியமனம்
பங்களாதேஸில் தீயணைப்பு படை வீரர்களாக முதல் முறையாக 15 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்ந நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக 2,707 பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 15 பேர் தீயணைப்புப் படை வீராங்கனைகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாலின பாகுபாடிற்கு எதிரான முயற்சியாக தீயணைப்புப் படை வீராங்கனைகள் நியமிக்கப்படுவதாக பங்களாதேஸ் அரசு தெரிவித்துள்ளது.
15 பேர் நியமனம்
இதேவேளை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இதற்கு முன்னர் பெண்கள் பணிபுரிந்துள்ள நிலையில், தீயணைப்புப் படை வீராங்கனைகளாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பங்களாதேஸ் தேசிய உள்துறை அமைச்சர் அசாதுஸ்மன் கான் கமல், தலைநகர் டாக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவிக்கையில்
”15 வீராங்கனைகள் தீயணைப்புப் படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். உடல் தகுதி, மருத்துவ பரிசோதனை, எழுத்துத் தேர்வு மூலம் 2,707 விண்ணப்பங்கள் தீயணைப்புப் படை வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முதற் கட்டமாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |