ரணிலுக்கு கிடைத்த வெற்றி : மொட்டுவிலிருந்து வெளியேற தயாராகும் எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள்
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Nimal Lanza
By Jaso
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
42 அமைச்சர்கள் அதிபருக்கு ஆதரவளிக்க
ஏற்கனவே 42 அமைச்சர்கள் அதிபருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிமல் லான்சா புதிய கூட்டணி
இதேவேளை,அதிபருக்கு ஆதரவளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா புதிய கூட்டணியை உருவாக்கி வருகிறார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |