சோமாலிய அதிபரின் மகனுக்கு பிடியாணை பிறப்பித்தது துருக்கி
சோமாலிய அதிபரின் மகனுக்கு துருக்கி சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது.
சோமாலிய அதிபரின் மகன் கார் விபத்தை ஏற்படுத்தி நபர் ஒருவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்தே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பை ஏற்படுத்திய நிலையில்
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் காரை ஓட்டிச் சென்வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை மோதி அவர் உயிரிழப்பதற்கு காரணமான நிலையில் அதிபரின் மகன் தப்பிச் சென்றுள்ளார்.
சோமாலிய துணைத் தூதரகத்துக்குச் சொந்தமான கார் ஒன்றே அவ்வாறு ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
பயணத் தடை விதித்த போதிலும்
சோமாலிய அதிபரின் மகனுக்கு துருக்கி பயணத் தடை விதித்த போதிலும், அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் சோமாலியஅதிபர் ஹசன் ஷேக் மொஹமட்டின் மகன் மொஹமட் ஹசன் ஷேக் மொஹமட் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |