இந்திய பெருங்கடலில் பணியாளர்களுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பல்: மீட்பு பணிகள் தீவிரம்
ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் இந்தியப் பெருங்கடலில் பங்காளதேசத்தின் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலைக் கடத்தி 23 பணியாளர்களையும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்தோடு, கடற்கொள்ளையர்கள் சோமாலியர்களாக இருக்கலாம் என பங்களாதேஷின் கப்பல் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் ஜெனரல் முகமது மக்சுத் ஆலம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், எம்வி அப்துல்லா என்ற சரக்குக் கப்பல் மொசாம்பிக்கின் மபுடோ துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல் ஹம்ரியா துறைமுகத்திற்கு நிலக்கரியை ஏற்றிச் சென்ற போது கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகள்
அதேவேளை, பணயக்கைதிகளாக பிடித்து வைக்கபட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், முடியுமான வரை செயற்பட்டு அவர்களையும் கப்பலையும் மீட்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறதாகவும் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடத்தப்பட்ட கப்பல், பங்காளதேச எஸ்ஆர் ஷிப்பிங் லைன்ஸுக்கு சொந்தமானது என அதிகாரியோருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கு முன், 2010ல், அரபிக்கடலில், எஸ்ஆர் ஷிப்பிங்கின் மற்றொரு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |