பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம்
பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடரின் டாக்கா கெப்பிடல்ஸின் உதவி பயிற்சியாளரும், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துடன் (பிசிபி) இணைக்கப்பட்ட சிறப்பு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளருமான மஹ்பூப் அலி ஜாக்கி, மாரடைப்பால் காலமானார்.
சனிக்கிழமை போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சில்ஹெட்டில் டாக்கா கெப்பிடல்ஸ் அணி விளையாடும் 2026 பிபிஎல் டி20 தொடரின் தொடக்க ஆட்டத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஜாக்கி மைதானத்தில் சரிந்து விழுந்துள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

“பங்களாதேஷ் கிரிக்கெட் சபை , பங்களாதேஷ் கிரிக்கெட் சபை விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரும், பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் டாக்கா கேபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளருமான மஹ்பூப் அலி ஜாக்கியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.