பங்களாதேஷ் பிரதமர் அலுவலகத்தினுள் புகுந்த போராட்டகாரர்கள்: வைரலான காணொளி
பங்களாதேஷில் வன்முறை வெடித்துள்ளதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தினுள் சென்று புகைப்படம் எடுத்துள்ள காணொளி வெளியாகியுள்ளது.
பங்களாதேஷில் ஆளும் அவாமி லீக் அரசுக்கு எதிரான போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்திற்கு 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் 100 பேர் வரை உயிரிழந்துடன் பலர் காயமடைந்துள்ளனர்.
ஹசீனா பதவி விலகல்
இன்றும் அந்நாட்டின் வன்முறை வெடித்து பிரதமர் ஷேக் ஹசீனா( Sheikh Hasina) பதவி விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்த பதவி விலகிய பிரதமர் அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தினுள் இன்று புகுந்து அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
ஒரு சிலர் மேசை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்துள்ளதோடு சிலர் தொலைபேசியில் செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர்.
வெளியாகியுள்ள காணொளி
நாடாளுமன்றத்தின் உள்ளே இருந்தவர்களில் சிலர் பொருட்களை எரித்ததில், அந்த பகுதி முழுவதும் புகை பரவியுள்ளது.
The Parliament of Bangladesh right now.
— Anand Ranganathan (@ARanganathan72) August 5, 2024
Fifty years after we helped Sheikh Mujibur Rahman fight Jihadis, we help his daughter escape them. pic.twitter.com/oetHT9zVTE
சிலர் கைத்தட்டியும், வெற்றி முழக்கங்களை எழுப்பியும், மேசை மீது நடந்து சென்றும், குதித்தபடியும் காணப்படுகின்றமை காணொளியில் காணகூடியதாக உள்ளது.
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டளவில் நடந்த அரகலய போராட்டத்தின் போது இவ்வாறு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |