உலககிண்ண ரி20 தொடர் : வங்கதேச அணி இந்தியா செல்ல மறுப்பு
நடைபெறவுள்ள ரி 20 உலகக் கிண்ணபோட்டிகளில் விளையாட வங்கதேச அணி இந்தியா செல்ல மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் சூழ்நிலையில் வங்கதேச வீரர்களின் "பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை" கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும்
அதன்படி, இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை இலங்கையில் நடத்த நடத்த வேண்டும் என்று வங்கதேச அணி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் இந்தியா கூட்டாக நடத்தும் இந்தப்போட்டியில் வங்கதேசம் கொல்கத்தாவில் மூன்று போட்டிகளை விளையாட உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட வங்கதேச வீரர்
வரவிருக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாட திட்டமிடப்பட்டிருந்த வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டமை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்திற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்தாபிசுர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |