உலகநாடுகள் உற்று நோக்கும் பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல்
பங்களாதேசத்தின் தேசியப் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று(12) நாடெங்கிலும் இடம்பெறுகிறது. 2024 இல் இளைஞர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பதவி விலகி நாட்டை விட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறிய பின்னர் இடம்பெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
அதனால் இத்தேர்தல் குறித்து உலக நாடுகள் விஷேட கவனம் செலுத்தியுள்ளன.
இறுதிக்கட்ட பிரசார நடவடிக்கைகள்
நேற்று(11) காலையுடன் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசார நடவடிக்கைகள் முடிவுற்றது. இன்று காலை உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி மாலை 4.30 மணிக்கு முடிவடையவிருக்கிறது.

பங்களாதேசத்தின் 64 மாவட்டங்களிலுள்ள 300 நாடாளுமன்ற தொகுதிகளுக்காக 42,761 வாக்குச் சாவடிகளில் வாக்குகள் பதிவு இடம்பெற உள்ளது என்று வங்காளதேச தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்
இவ்வாக்களிப்பின் நிமித்தம் வாக்கு பெட்டிகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அத்தோடு வாக்களிப்பின் நிமித்தம் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 16 மணி நேரம் முன்