கிளிநொச்சியில் முதியவரை ஏமாற்றி பணமோசடி
கிளிநொச்சி பகுதியில் வங்கி ஊழியர் ஒருவரும் அவரது கணவரும் இணைந்து முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளனர்.
முதியவர் ஒருவரிடம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் மற்றும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என ஆறு இலட்சம் ரூபா பணத்தினை மோசடியாகப் பெற்று குறித்த முதியவரை ஏமாற்றியுள்ளதுடன் அதற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலையினையும் வழங்கியுள்ளனர்.
காவல்துறையில் முறைப்பாடு
இவ்வாறு பாதிக்கப்பட்ட முதியவரால் கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினர் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளனர்.
குறித்த வங்கி ஊழியரும் அவரது கணவரும் ஏற்கனவே பலரை ஏமாற்றி மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |