அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..! கொழும்பில் சூடு பறந்த விவாதம்
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாமல் நிறைவேற்று அதிபர் பதவியை இரத்துச் செய்வதற்கு எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் குழுவும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு எம்.பி.க்களும் இது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
அதிபர் தேர்தலை பிற்போட முயற்சி
நிறைவேற்று அதிபர் பதவியை நீக்குவது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்பட்டு அதிபர் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் பிற்போடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.
பரந்த கலந்துரையாடலின் பின்னர் நிறைவேற்று அதிபர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் அதனை உடனடியாக நீக்கக் கூடாது எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்துவதில் தாமதம்
நிறைவேற்று அதிபர் பதவியை இல்லாதொழிப்பதன் மூலம் நாட்டில் தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம் எனவும் அதனால் நாட்டில் பயங்கரமான சூழல் உருவாகலாம் எனவும் அது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |