தடம் புரளும் மலையக தொடருந்துகள் : சுற்றுலா பயணிகள் பெரும் சிரமம்
2023 ஆம் ஆண்டு கம்பளை முதல் பதுளை வரையிலான பகுதியில் 18 தொடருந்துகள் தடம் புரண்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் கடந்த சில நாட்களில் மூன்று தொடருந்து தடம் புரண்டதாகவும் தொடருந்து பயணிகள் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி தொடருந்து தடம் புரள்வதால் தாம் கடும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்குவதாக மலையக தொடருந்து பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
அடிக்கடி தடம் புரளும் தொடருந்துகள்
மலையக தொடருந்து பாதையில் செல்லும் தொடருந்துகள் தடம் புரண்டால் மிகவும் சிரமப்பட்டு பேருந்துகளைப் பெற நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவும், தமது பொதிகள் மற்றும் பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் போது பெரும் சிரமங்களையும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிடும் எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மலையக தொடருந்துகளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிப்பதாகவும், அடிக்கடி தடம் புரள்வதால் அந்த வெளிநாட்டவர்களும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுற்றுலா பயணிகள் பெரும் சிரமம்
மலையக தொடருந்து பாதையில் தொடர்ந்து தொடருந்துகள் தடம் புரள்வதால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தொடருந்துகளில் பயணம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
மலையக தொடருந்து பாதையை உரிய முறையில் பராமரித்து தொடருந்து தடம் புரளும் சாத்தியக்கூறுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடருந்து பயணிகள் மேலும் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |