கொழும்பு போட் சிற்றியில் கால் பதிக்கிறது சீன வங்கி
கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்திய தலைமையகத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளுக்கு சீனாவின் ஆதரவையும் அவர் நாடியுள்ளார்.
நேற்று (1) காலை ஜூம் தொழில்நுட்பம் ஊடாக சீன மக்கள் காங்கிரஸின் (சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகர்) லீ ஷாங்க்சுவின் உட்பட நிலைக்குழுத் தலைவர்களுடனான சந்திப்பில் அவர் மேற்கண்ட உறுதிமொழியை அளித்தார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உட்பட மற்ற முதலீடுகளுக்கு சீனா உதவும் என்று சீன மக்கள் காங்கிரஸின் (சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகர்) நிலைக்குழுவின் தலைவர் லி ஜான்ஷு கூறினார். நெருங்கிய நண்பராக இலங்கை பொருளாதாரத்திற்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக சீன சபாநாயகர் இதன்போது உறுதியளித்தார்.
மேலும் இந்த கலந்துரையாடலை முன்னோக்கி கொண்டு செல்லவும் அவர் உறுதி பூண்டார்.
தற்போதைய கொவிட் நிலைமை முடிந்த பின்னர் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 29 நிமிடங்கள் முன்