வங்குரோத்தடையும் இலங்கை!! அரச தலைவரிடம் விநயமான கோரிக்கை
sri lanka
Champika Ranawaka
current
situation
gotabaya rajapaksa
bankrupt
By Vanan
இலங்கை தற்போது வங்குரோத்து நிலையிலேயே உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) கூறுகிறார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“கடந்த இரண்டு வருடங்கள் வீணடிக்கப்பட்டது கொரோனா தொற்றுநோயால் அல்ல, ஆட்சியாளர்களின் இயலாமையால் தான்.
அரச தலைவர் நினைப்பது போன்று இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது.
இன்னும் மூன்று வருடங்கள் பற்றி அரச தலைவர் பேசுவதில் பயனில்லை.
முடிந்தால் மக்களுக்கு அத்தியாவசியமான உணவு, எரிபொருள், எரிவாயு, மருந்து, மின்சாரம் போன்றவற்றை அடுத்த மூன்று வாரங்களில் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும்” என்றார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி