யாழில் பிரபல ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு
Sri Lanka Police
Jaffna
By Sathangani
யாழ். நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆலய வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் முறைப்பாடு

குறித்த திருட்டுச் சம்பவத்துடன் ஆலயத்தில் நெருங்கிச் செயற்பட்டவர் சம்பந்தப்பட்டமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பில் ஆலய குருக்கள் யாழ் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.