கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாணய பரிமாற்ற சேவையில் ஏற்படும் மாற்றம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வெளியேறும் முனையத்தில் நாணய பரிமாற்ற கருமபீடங்களை இயக்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன் படி, வெளியேறும் முனையத்தில் 5 நாணய மாற்றுக் கருமபீடங்களைச் செயற்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனுமதி பெற்ற வணிக வங்கிகள், அனுமதி பெற்ற விசேட வங்கிகள் மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று வணிகத்தில் ஈடுபட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
நிறுவனங்கள்
இந்த நிலையில், அதற்காக ஐந்து நிறுவனங்கள் (05) விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் முன்மொழிவிற்கு அமைய 03 வருட காலத்திற்காக பின்வரும் நிறுவனங்களுக்கு நாணயமாற்று கருமபீடங்களை செயற்படுத்துவதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருமபீட இலக்கம் 25 ரூ.மில்லியன் 798.028 + வரியுடன் கூடிய தொகைக்கு இலங்கை வங்கிக்கும்,
கருமபீட இலக்கம் 02 ரூ.மில்லியன் 633.662 + வரியுடன் கூடிய தொகைக்கு சம்பத் வங்கிக்கும்,
கருமபீட இலக்கம் 04 ரூ. மில்லியன் 381.364 + வரியுடன் கூடிய தொகைக்கு கொமர்ஷல் வங்கிக்கும்,
கருமபீட இலக்கம் 10 ரூ.மில்லியன் 299.064 + வரியுடன் கூடிய தொகைக்கு தோமஸ் குக் லங்கா (பிறைவெட்) லிமிட்டட் இற்கும்,
கருமபீட இலக்கம் 11 ரூ.மில்லியன் 225.689 + வரியுடன் கூடிய தொகைக்கு ஹட்டன் நெஷனல் வங்கிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த முன்மொழிவானது, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்பித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |