குற்றத்தடுப்புப் பிரிவு அதிரடி : யாழில் 2 கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்கள் பறிமுதல்
Sri Lanka Police
Jaffna
Import
By Theepan
நாட்டுக்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2 கோடி ரூபாய் பெறுமதியான 7 வாகனங்கள் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல்களுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த வாகனங்களில் 4 வாகனங்கள் அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் என்றும் அவை எவற்றுக்கும் பதிவுப் புத்தகங்கள் இல்லை என்று கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
ஏனைய மூன்று வாகனங்களில் ஒரு வாகனம் போலிப் பதிவு காரணமாகவும், இரண்டு வாகனங்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட வாகனங்கள் என்பதாலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி