மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் : மன உழைச்சலுக்குள்ளான மனோ கணேசன்

Sri Lanka Upcountry People Mano Ganeshan Sri Lanka Narendra Modi Jeevan Thondaman
By Sathangani Feb 22, 2024 10:52 AM GMT
Report

நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த இந்திய அரசின் நிதி உதவியோடு மலையகத்தில் அமைக்கப்பட இருக்கின்ற வீட்டுத்திட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமான தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதித் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கம் மலையகப்பகுதியில் பல்வேறு வகையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மலையக மக்களின் வாழ்வாதார கல்வி, குடியிருப்பு, பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் இதில் உள்ளடங்கும்.

கறுப்பு ஜூலைக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைகளே காரணம்: ஆதாரங்களை அடுக்கும் ஜே.வி.பி

கறுப்பு ஜூலைக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைகளே காரணம்: ஆதாரங்களை அடுக்கும் ஜே.வி.பி

நரேந்திர மோடியின் மலையக விஜயம்

ஆனால், இத்திட்டங்களைப் பயன்படுத்தி அதை அரசியலாக்கி அதில் இலாபம் தேடி சுவை கண்டவர்களுக்கு தமது அரசியல் எதிர்காலம் குறித்து கிளிகொள்ளச் செய்துள்ளது. இதனாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தடுமாற்றத்துக்கு உள்ளாகி உள்ளார்.

நல்லாட்சி காலத்துக்கு முன்பே மலையக மக்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான முடிவை இந்திய மத்திய அரசு எடுத்திருந்தது. அதற்கான பூர்வாங்க வேலைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்திருந்தது.

மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் : மன உழைச்சலுக்குள்ளான மனோ கணேசன் | Barath Lanka Housing Project Up Country By India

அதன் அடிப்படையிலேயே நான்காயிரம் வீடுகளை முதற்கட்டமாக வழங்குவதற்கு இந்திய அரசு முடிவெடுத்து அதை நடைமுறைப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே பத்தாயிரம் வீட்டு திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மலையக விஜயத்தின்போது அறிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலையகத்துக்கான பத்தாயிரம் வீட்டு திட்டத்தை அறிவித்தபோது மலையக மக்களின் குடியிருப்பு தேவை கருதி இந்திய அரசால் நன்கொடையாக வீட்டுத் திட்டம் வழங்கப்படுகின்றது என்று கூறினாரே தவிர எந்த ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையை ஏற்றும் வழங்குவதாக தெரிவிக்கவில்லை.

எனினும், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் பிதாமகனாக மனோ கணேசன் தன்னைக் காட்டிக்கொள்ள முற்படுகின்றார். வெளிநாட்டு நன்கொடைகள் கிடைக்கின்ற போது நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற அரசாங்க அமைச்சர்கள் அதை நடைமுறைப்படுத்துவார்கள்.

இதுதான் பொதுவான நடைமுறையாகும். இதில் மக்களுக்கு நன்மைகள் சென்றடைய வேண்டும் என்பதே பிரதானமாகும். நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

இந்தியாவுக்கு கடன்பட்டுள்ள இலங்கை! ஹரின் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

இந்தியாவுக்கு கடன்பட்டுள்ள இலங்கை! ஹரின் மீண்டும் சர்ச்சைப் பேச்சு

மாகாண சபை தேர்தல் முறையை இல்லாமல் செய்தவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிரணியிலுள்ள அரசியல்வாதிகளை விமர்சனம் செய்து அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டை கடைபிடித்து வருகிறது.

நாம் அமைதியாக இருக்கின்றோம் என்பதற்காக எமது நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தி அரசியல் செய்வதற்கு முற்பட்டால் எமக்கும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் : மன உழைச்சலுக்குள்ளான மனோ கணேசன் | Barath Lanka Housing Project Up Country By India

இலங்கையில் புரையோடிப் போயிருந்த இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் கடுமையான முயற்சியின் காரணமாக 13ஆவது அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

நல்லாட்சி காலத்தின் போது தேர்தல் தோல்விக்கு பயந்து மாகாணசபை தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி மாகாண சபை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதில் பிரதான பங்கு வகித்தவர் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன். மாகாண சபை தேர்தல் முறையை இல்லாமல் செய்துவிட்டு இன்று சிறுபான்மை மக்களின் ரட்சகர் போல் நடந்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.

அதேபோல தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதாக மார்தட்டிக் கொண்டு 50 ரூபாய் சம்பளம் அதிகரிப்பை கூட பெற்றுக் கொண்டிருக்க முடியாத கையாலாகாத தனத்தை மலையக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பசிலினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் சொகுசு வீடு! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

பசிலினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் சொகுசு வீடு! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

மலையக மக்களின் வீட்டுத்தேவைகள் 

தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மலையகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களை அழைத்து ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொடுப்பதாக கூறி போலியான நியமனக் கடிதங்களை வழங்கிவிட்டு தேர்தல் முடிந்தவுடன் அவர்களை நடுவீதிக்கு கொண்டு வந்து விட்டதையும் இங்கு நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கின்றது.

இவ்வாறான மக்கள் விரோத செயற்பாடுகளில் இலங்கை தொழிலாளர்கள் காங்கிரஸ் எப்போதும் ஈடுபட்டது கிடையாது. தேர்தல் வெற்றியை விட சமூக மேம்பாடு இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மேலானது என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நிரூபித்து காட்டி இருக்கிறோம்.

மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் : மன உழைச்சலுக்குள்ளான மனோ கணேசன் | Barath Lanka Housing Project Up Country By India

நல்லாட்சி காலத்துக்கு முன்பே இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையில் பல்வேறு வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் எவ்விதக் கட்சி பாகுபாடும் இருக்கவில்லை. ஆனால் நல்லாட்சி காலத்திலேயே முதல் முதலாக கட்சி ரீதியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

அன்று கட்சி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று வீடுகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு வீடுகள் வழங்குவது நியாயமானதாகும். மலையக மக்கள் எந்த தொழிற்சங்கத்தில், அரசியல் கட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களில் வீட்டுத்தேவை யாருக்கு இருக்கிறது என்பதே முக்கியமானதாகும். அவற்றை நிறைவேற்றுவது தற்போதைய அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கடமையும் ஆகும்.

எம்மைப் பொறுத்தவரையிலே எல்லா விடயங்களுக்கும் கட்சி கலாசாரத்தை கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை இந்திய வம்சாவளி மக்கள் ஒற்றுமையாக இருந்து தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்படுமாறு மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கிறோம்“ என கனகராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025