பெரும் திட்டத்துடன் அமெரிக்கா பறந்த பஷில்? இரகசியம் என்ன?
america
srilanka podujana peramuna
basil rajabhaksha
By Kalaimathy
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச நாட்டுக்கு நல்லது செய்யும் வேலைத்திட்டத்துடன் அவசரமாக வெளிநாடு சென்றதாகவும் அவர் எதற்காக வெளிநாடு சென்றார் என்பதை தற்போது தெரியப்படுத்த போவதில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய அவரால் மேற்கொள்ளக் கூடிய அழுத்தங்கள் ஊடாக நாட்டுக்கு நல்லதை செய்யும் வேலைத்திட்டத்துடன் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளார்.
அதனை தற்போது கூறினால் செய்ய முடியாமல் போய்விடும். இதனால் அதனை நாங்கள் வெளியிடமாட்டோம் எனவும் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்