ரணில் பதவியில் இருக்கும் வரை அது நடக்காது - உண்மையை போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பி
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Mujibur Rahman
By Sumithiran
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்நாட்டில் பொருளாதார குற்றங்களை இழைத்தவர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஆனால் ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரை அப்படி ஒன்று நடக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
பசில் ராஜபக்சவிற்கு அமோக வரவேற்பு
இதேவேளை இன்றுகாலை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் ராஜபக்சவிற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளும் கட்சியின் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமான நிலையம் சென்று அவரை வரவேற்றதுடன் சிலர் பசிலுக்கு முன்பாக விழுந்து வணங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி