சஷீந்திர ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சஷீந்திர ராஜபக்சவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) குடும்பத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இவரை சற்று முன்னர் (06.08.2025) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான, செவனகல கிரியிப்பன் வெவ பகுதியில் உள்ள காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் உட்பட பல சொத்துக்கள் 09.05.2022 அன்று நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்தன.
சொத்துக்கள் குற்றவியல் ரீதியாக முறைகேடு
மேற்படி சொத்துக்கான இழப்பீட்டின் போது, அந்த காணி இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என அடையாளப்படுத்தப்பட்டதால் இழப்பீடு மறுக்கப்பட்ட போதிலும், அதற்கு மாறாக, இழப்பீட்டு அலுவலகத்தில் இணைக்கப்பட்ட சில அரசு அதிகாரிகளுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்ததாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த இழப்பீட்டை பெற்றதன் மூலம் ஊழல் செய்தல் மற்றும் சதி செய்தலுடன், இந்த சொத்துக்கள் மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமானது என்பதால், மகாவலி அதிகாரசபையின் சொத்துக்கள் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
