இந்தியா செல்லும் பசில்! வெளியான காரணம்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksha) எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நோக்கிலேயே, பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.
பசில் ராஜபக்சவின் முதலாவது இந்திய விஜயத்தின் போது, இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டத்திற்கான இணக்கம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்ட 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தில், இந்தியாவிடமிருந்து முதல் கட்டமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இதன்படி, இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நோக்கிலேயே பசில் ராஜபக்ச, இந்தியாவிற்கு மீண்டும் விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
