பசில் ராஜபக்சவிற்கு ஏற்பட்ட நிலை :மருத்துவர்கள் வழங்கிய அறிவுரை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விமானப் பயணத்தைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச தற்போது பல மணிநேரங்களுக்கு விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என்பதை மருத்துவ அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
பிடியாணை பிறப்பிப்பது ஒரு சாதாரண நடைமுறை
பசில் ராஜபக்சவின் உடல்நிலை காரணமாக, அவரது பயணத்திற்கான பொறுப்பை ஏற்க விமான நிறுவனங்கள் கூட தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வழக்கமாக, ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறும்போது பிடியாணை பிறப்பிப்பது ஒரு சாதாரண நடைமுறையாகும், மேலும் பசில் ராஜபக்ச குணமடைந்தவுடன் திரும்புவதற்குத் தயாராக இருக்கிறார் என்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |