மொட்டுக் கட்சியை கைவிட்டார் பசில்! அமெரிக்காவில் தஞ்சம்
SLPP
Basil Rajapaksa
Namal Rajapaksa
Sri Lankan Peoples
By Dilakshan
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக (D. V. Chanaka)தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகளை தற்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) மேற்கொண்டு வருவதாகவும் சானக கூறியுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல்
அத்தோடு, இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலிலும் பசில் ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பசில் ராஜபக்ச அனைத்திலிருந்தும் விலகி தற்போது அமெரிக்காவில் தங்கியிருப்பதாாகவும் டி.வி. சானக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்