பசில் ராஜபக்ச திடீரென வெளிநாடு பறந்தது ஏன்..! வெளியானது காரணம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச(basil rajapaksa) மருத்துவ நோக்கங்களுக்காக டுபாய் சென்றுள்ளார் என்பதை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(sagara kariyawasam) உறுதிப்படுத்தியுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு செல்லவிருந்ததாகவும், ஆனால் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் (namal rajapaksa)தேர்தல் நடவடிக்கைகளுக்காக கடைசி நேரம் வரை இரவு பகலாக உழைத்ததாகவும் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
கட்சிக்கு அறிவித்த பசில்
பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதாக கட்சிக்கு தெரிவித்திருந்தார். மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர் விரைவில் நாடு திரும்புவார்.
விரைவில் நாடு திரும்புவார்
மேலும், வெளிநாடு சென்றுள்ள பசில் ராஜபக்ச விரைவில் திரும்பி வந்து கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
