பசில் ராஜபக்ஷ தொடர்பில் வெளியானது வர்த்தமானி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ நாளை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சி தகவல் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், பசிலின் பெயர் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நேற்றைய தினம் இராஜினாமா செய்திருந்தார்.
பசிலின் நாடாளுமன்ற வருகைக்கான வெற்றிடத்தை ஏற்படுத்தவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.