அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் பசில்
Colombo
Basil Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
By Jaso
விசேட உள்ளக கலந்துரையாடல்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல விசேட உள்ளக கலந்துரையாடல்கள் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தலைமையில் பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நாட்டின் முக்கிய பிரச்சினைகள்
இந்த கலந்துரையாடல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி