21 எதிர்க்கட்சி பேரணியன்றே நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய பசில்
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நிறுவனர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ. 50 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, நவம்பர் 21 வெள்ளிக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
இருப்பினும், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பசில் ராஜபக்ச இலங்கைக்குத் திரும்புவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக வழக்கு விசாரணையின் போது, நாற்காலியில் இருந்து விழுந்ததைத் தொடர்ந்து முதுகுத்தண்டு மற்றும் நரம்பு சிக்கல்களுக்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாக பசலின் சட்டக் குழு மே மாதம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
பிடியாணை கோரிக்கை
அத்தோடு, ஒரு அமெரிக்க மருத்துவர் ஆறு மாதங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்க்குமாறு அவருக்கு அறிவுறுத்தியதாகதாக கூறப்பட்டதால், அவர் எதிர்வரும் வெளிக்கிழழை(21.11) நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நாடு திரும்புவாரா என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன.

முந்தைய விசாரணைகளில் அவர் இல்லாததால், அவரது பிணையை ரத்து செய்து பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என்று அரச சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், நீதிமன்றம் குறித்த கோரிக்கையை நிராகரித்து அடுத்த திகதியில் முன்னிலையாக உத்தரவிட்டது.
உறுதிப்படுத்தல்
இவ்வாறானதொரு பின்னணியில், சம்பந்தப்பட்ட விசாரணை ஒரு முக்கிய அரசியல் நிகழ்வான நவம்பர் 21 ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி பேரணியின் போது நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பசில் ராஜபக்ச நாடு திரும்புவாரா என்பது குறித்து அவரது பிரதிநிதிகளிடமிருந்தோ அல்லது குடும்பத்தினரிடமிருந்தோ அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்