பசில் அமெரிக்கா பறந்தது ஏன்? அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
பசில் ராஜபக்சவின் ஒருங்கிணைப்பு செய்யும் பலத்திற்கு சவால் விடக் கூடியவர்கள் எவரும் இல்லை என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா வத்துப்பிட்டிவல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
பசில் ராஜபக்ச சார்பில் ஜனாதிபதியோ கட்சியோ அந்த பொறுப்பின் பகுதியை சரியாக நிறைவேற்றும். சமூக வலைத்தளங்களில் பசில் ராஜபக்சவை கொவிட் குழுவின் தலைவராக குறிப்பிட்டிருந்தாலும் அவ்வாறான பதவி அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
நாடாளுமன்றத்திற்கு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அவர் வரவில்லை. திரைக்கு பின்னால் இருந்தவாறு பசில் ராஜபக்ச கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்காக பாரிய வேலைகளை செய்துள்ளார். அவர் சிறப்பாக வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்து வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் கூறப்படுவது போல் அவர் நாட்டை விட்டு செல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
பசில் ராஜபக்ச ஒருங்கிணைப்பு செய்யும் பலத்திற்கு சவால் விடக் கூடியவர்கள் எவரும் இல்லை. இப்படியான சந்தர்ப்பத்தில் பசில் ராஜபக்ச போன்ற நபர் நாட்டுக்கு அவசியம். தனிப்பட்ட தேவைக்காக அவர் குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார் என்றார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்