வெற்றியடைபவர்கள் வாழ்க்கையில் அதிக தடைகளை எதிர்கொள்வார்கள்!! சிரித்தபடி பசில்
வெற்றியடைபவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களால் அதிக தடைகளை எதிர்கொள்வார்கள் மற்றவர்களால் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணைகள் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பின்னர் செய்தியாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
21வது திருத்தம் குறித்து கேள்வி
21வது திருத்தம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சரிடம் இதன்போது வினவப்பட்டது.
அதற்கு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திருத்தத்திற்கு எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது தமக்கு தெரியாது என பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
21ஆவது திருத்தச் சட்டம் பசிலை போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை குறிவைத்துள்ளதா என செய்தியாளர்கள் வினவிய போது, பசில் ராஜபக்ச சிரித்துக் கொண்டே பலன் தரும் மரங்கள் அதிகம் கல்லால் அடிக்கப்படுவது போல், வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களால் அதிக தடைகளை சந்திக்க நேரிடும் என்றார்.
