21வது சீர்திருத்தத்தை சீர்குலைக்கும் நகர்வுகளில் பசில்! வெளிவந்த தகவல்
21வது திருத்தம்
முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ஆவது திருத்தச் சட்டம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவைப் பெற அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், இந்த வரைவு முன்மொழிவு வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அதற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியும் என அரசாங்கம் நம்புகிறது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
