பசிலின் சதித்திட்டம் - அம்பலப்படுத்திய விமல்
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa)தெரிவித்துள்ளார்.
யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு கையளிப்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொதுக்கூட்டத்தில் இன்று பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிதியமைச்சரால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படாமை தொடர்பான சதித்திட்டம் தொடர்பில் இதன்போது அமைச்சர் விரிவாக விளக்கமளித்தார்.அத்துடன் அரசாங்கத்தின் அமைச்சரவையில், பொய்யாகவும், திருட்டுத் தனமாகவும் அமைச்சரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் அமைச்சர்கள் குழு சார்பில் எந்த துரோகமும் செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.