தனது காவியுடைகளை வீதியில் போட்டு எரித்த தேரர்
திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர விகாரைக்கான துண்டிக்கப்பட்ட நீர் விநியோகத்தை மீள வழங்குமாறு கோரி ஹம்பாந்தோட்டை பிராந்திய நீர் முகாமைத்துவ காரியாலயத்திற்கு முன்பாக தேரர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தண்ணீர் இல்லாததால் தனது அங்கிகளை துவைக்க கூட முடியவில்லை எனக் கூறி அலுவலகம் முன் தனது பல அங்கிகளை தீ வைத்து எரித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
111/A, கவுந்திஸ்ஸபுர, திஸ்ஸமஹாராம எனும் முகவரியில் அமைந்துள்ள விகாரைக்கான நீர் கட்டணம் ரூபா 71,991.17 2021 டிசம்பர் 24 ஆம் திகதி வரை செலுத்தப்படாத காரணத்தினால் குறித்த விகாரையின் தேரருக்கு பலமுறை அறிவிக்கப்பட்டது.
வழிபாட்டுத் தலங்களுக்கு குடிநீர் வழங்கும் சலுகைக் கட்டணத் திட்டத்தில் இந்தக் விகாரைக்கு நீர் விநியோகம் செய்யப்படுகிறது. 5,000 ரூபாய்க்கு மேல் தண்ணீர் கட்டணம் பாக்கி இருந்தால் தண்ணீர் இணைப்பை துண்டிக்க நீர் வாரியத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு.
எனினும், இப்பகுதியில் வழிபாட்டுத் தலமாக உள்ளதால், தண்ணீர் இணைப்பை துண்டிக்காமல், இந்த நிலுவையைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பல சந்தர்ப்பங்களில், அன்புடன் தெரிவிக்கப்பட்டது.
10,000.00 ரூபா 2022 ஜனவரி 13 ஆம் திகதி செலுத்தப்பட்டுள்ளதாக பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அப்போது குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. (1822.01.18 இல் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.) குடிநீர் கட்டணம் முழுவதுமாக செலுத்தப்படாத நிலையில், அதில் ஒரு பகுதி மட்டும் செலுத்தப்படும் போது குடிநீர் இணைப்பு திரும்ப வழங்கப்படும்.
அரச குடியிருப்பில் வசிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நீர் கட்டண நிலுவைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.