கனடாவில் சில இடங்களில் அதிரடியாக மாற்றம் கண்ட எரிபொருள் விலை
கனடாவின் (Canada) சில முக்கிய பகுதிகளில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், நோவா ஸ்கோஷியா (Nova Scotia) மற்றும் நியூ பிரவுன்ஸ்விக் (New Brunswick) பகுதிகளிலே இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நோவா ஸ்கோஸியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 3.3 சதங்களினால் அதிகரித்துள்ளது.
டீசலின் விலை
ஹாலிபெக்ஸ் பகுதியில் பெற்றோல் ஒரு லீற்றரின் குறைந்தபட்ச விலை 166.2 சதங்கள் என்பதுடன் ஒரு லீற்றர் டீசலின் விலை 4.1 சதத்தினால் அதிகரித்துள்ளது.
அத்தோடு, ஒரு லீற்றர் டீசலின் குறைந்தபட்ச விலை 197 சதங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரின்ஸ் ஒப் எட்வர்ட் மற்றும் நியூபிரவுன்ஸ்விக் ஆகிய பகுதிகளிலும் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |