மட்டக்களப்பில் பொலிஸாரின் காவலில் இருந்த இளைஞன் உயிரிழந்தது எப்படி? விசாரணைகள் ஆரம்பம்
srilanka
police
investigation
crime
batticalo
By S P Thas
மட்டக்களப்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 22 வயதான இளைஞர் ஒருவர் தடுப்புக் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
எவ்வாறெனினும் குறித்த நபர் திடீரென நோய்வாய்ப்பட்டு கீழே விழுந்துள்ளார் என்றும், குறித்த இளைஞர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்