இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டில் பொது மகன் பலி!
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டின் முன்னால் இன்று மாலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் பொதுமகன் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மட்டக்களப்பு - சின்ன ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என தெரியவருகின்றது.



