சந்தனமடு ஆற்று மண் மாலைதீவுக்கு ஏற்றப்படுகின்றதா? நேரடியாக கள விஜயம் மேற்கொண்ட எம்.பி!
மட்டக்களப்பு செங்கலடி செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி மூன்று கிராம சேவகர் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றில் அண்மைய தினங்களாக இரவு வேளையில் சட்டவிரோதமாக மணல் அகளப்பட்டு வருவதாக தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் அதனுடைய உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்காக இன்று காலை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா .சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த மண் அகழ்வு தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார் .
இதன் போது குறித்த மண் அகழ்வு காரணமாக பாரிய விபரீதத்துக்கு அந்த மக்கள் முகம் கொடுக்க நேரிடும் என்றும், இது உடனடியாக நிறுத்தப்பட்டு குறித்த இடத்தில் எடுக்கப்பட்ட மணலை அவ்விடத்தில் மீளவும் கொண்டு நிரப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .
குறித்த ஆற்றில் 2015ஆம் ஆண்டில் இருந்து தற்பொழுது வரைக்குமான காலப்பகுதியில் மணல் அகழ்வு முற்றுமுழுதாக இடைநிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டிருந்தது. மணல் அழ்வை தடுக்க வேண்டும் எனத் தொரிவித்து அக்காலப் பகுதியில் 11 இளைஞர்கள் சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிதம் கூட இருந்து மணல் அகழ்வை முற்று முழுதாக நிறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



