மட்டக்களப்பில் பெருமளவானோரிடம் அடையாளம் காணப்பட்ட டெல்டா திரிபு - 10 வயது சிறுவன் உயிரிழப்பு!
மட்டக்களப்பில் 89 வீதமானோருக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் நேற்று கிடைக்கப்பெற்றுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
அதில் 49 மாதிரிகளில் 43 மாதிரிகள் டெல்ரா வேரியன் ஆக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தடன் 4 அல்பா வேரியனும் இரண்டு மாதிரிகளுக்கு முடிவுகள் கிடைக்கப்பெறவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 88 வீதமானவர்களுக்கு மட்டக்களப்பில் டெல்டா வேரியன் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்ததுடன், நேற்றையதினம் மட்டக்களப்பு வவுணதீவில் 10 வயது சிறுவன் கொரோனாத் தொற்றால் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.