மட்டக்களப்பில் நேற்று பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
sri lanka
people
batticalo
By Shalini
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள கொவிட் நோயாளர்களை குணப்படுத்தும் மூன்று வைத்தியசாலைகளிலும் இருந்து நேற்றைய தினம் அதிகளவிலானோர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைவாக, கரடியனாறு வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பைச் சேர்ந்த 15 பேரும், காத்தான்குடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பைச் சேர்ந்த 21 பேரும், கல்லாறு வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பை சேர்ந்த ஒருவருமாக, கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்துள்ளனர்.
மேற்குறித்த 37 பேர் மூன்று வைத்தியசாலைகளிலும் இருந்து நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்