சிறையிலிருந்து விடுதலையான பிரசாந்தன் விடுத்துள்ள அறைகூவல்!
கிழக்கின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ .பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகிய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் முதற்கண் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு நான் பிணையில் விடுதலையாக காரணம் உண்மையில் நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுகின்றன என்பதே. இலங்கையில் நீதியை நாம் நம்புகின்றோம்.
உண்மையில் சிறந்த நீதிபதிகள் இருக்கின்றார்கள். தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கரத்தினை பலப்படுத்தி அனைவரும் ஒன்றிணைந்து வேலை செய்ய வேண்டும்.
கிழக்கு மாகாண மக்கள் தொடர்ந்து முடக்கப்பட்டதன் காரணமாக ஒரு தூர நோக்கின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றோம். உண்மையில் சிறைச்சாலையிலிருந்து எனது தலைவர் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார்.
கிழக்கு மாகாண மக்களுக்காக பணி செய்வதற்காக அனைத்து இளைஞர்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும் என இவ்விடத்தில் அறைகூவல் விடுகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .