வெளிநாட்டிலிருந்து வந்து தனிமையில் வசித்த பெண் மர்ம மரணம் - வெளியாகியுள்ள தகவல்!

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation Death
By Kalaimathy Feb 09, 2023 10:37 AM GMT
Report

வாழைச்சேனையில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் பல வருடங்களாக மலேஷியாவில் வசித்து வந்தார் எனவும், அண்மையிலேயே நாட்டிற்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலையிலேயே இவரது சடலம் கண்டுபிடிக்ககப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கல்குடா வீதி வாழைச்சேனையில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவரின் சடலமே உறவினர்கள் வழங்கிய தகவலின்படி கண்டு பிடித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

4 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமையில் வசித்த பெண் மர்ம மரணம் - வெளியாகியுள்ள தகவல்! | Batticalo Kalkuda Death Police Investigation East

கற்குடா வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த திருமதி பாஸ்கரன் சற்குணதேவி வயது 52 என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக தமது சகோதரியின் தொலைபேசி அழைப்பு துண்டித்து காணப்படுவதாகவும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை ஆகவே  அவரைத் தேடும்படி, வவுனியாவில் உள்ள சகோதரி ஒருவர் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வசிக்கும் தமது உறவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய அவர் இன்று காலை பிரதேச கிராம சேவகருக்கு தகவல் வழங்கியதை அடுத்து காவல்துறையினரின் துணையுடன் அவர் வசித்த வீட்டில் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் சடலத்தினை கண்டு பிடித்துள்ளனர்.

நீண்ட காலத்தின் பின்னர் நாட்டிற்கு வந்த பெண்

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமையில் வசித்த பெண் மர்ம மரணம் - வெளியாகியுள்ள தகவல்! | Batticalo Kalkuda Death Police Investigation East

இவர் கடந்த 10 வருடங்களாக மலேஷியாவில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வாழைச்சேனையில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தான் வசித்து வந்த வீட்டினை விற்பனை செய்து விட்டு வவுனியா திரும்பும் நிலையில் வீட்டினை விற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை தமக்கு கவலையளிப்பதாகவும் அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

காவல்துறை விசாரணை

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமையில் வசித்த பெண் மர்ம மரணம் - வெளியாகியுள்ள தகவல்! | Batticalo Kalkuda Death Police Investigation East

இதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கணவர் யாழ்ப்பாண பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார் என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026