மட்டக்களப்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கிழ் நேற்று 10 பேர் கைது!
arrest
police
batticalo
mullivaikkal
memorial
By Kalaimathy
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிப்பு தொடர்பாக நேற்றய தினம் மொத்தமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பலத்த தடை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நேற்றய தினம் கல்குடா கடற் கரை பகுதியில், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய போது கைது செய்யப்பட்ட 10 பேரும் தற்போது 3 பொலிஸ் பிரிவுகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் 4 பேரும் கல்குடா பொலிஸ் நிலையத்தில் 2 பேரும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் 4 பேரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இன்றய தினம் நீதிமன்றம் அழைத்து செல்லப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்