மட்டு. வவுணதீவில் கைக்குண்டுகள் மீட்பு
batticaloa
police
bomb
investication
By Vanan
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் உள்ள விவசாய காணியிலிருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் குறித்த காணியின் உரிமையாளர் காணியை விவசாய செய்கைக்காக தூய்மைப்படுத்திக் கொண்டிருந்த போது பொலித்தின் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் இந்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் மூன்று கைக்குண்டுகள் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்