விமான பயிற்சியகமாக மாறும் மட்டக்களப்பு விமான நிலையம்!
Batticaloa
Sri Lanka Cabinet
By Kanna
மட்டக்களப்பு விமான நிலையத்தை விமான பயிற்சியகமாக மாற்றுவதற்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த யோசனையை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.
செயற்படாத விமான நிலையம்
இலங்கை விமான படையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து கடந்த 2018ஆம் ஆண்டு மட்டக்களப்பு விமான நிலையத்தை உள்ளூர் விமான சேவைகளை மேற்கொள்வதற்கான தளமாக மாற்றியமைத்தனர்.
இருப்பினும், இதுவரை காலமும் குறித்த விமான தளத்திலிருந்து எவ்வித விமானங்களும் பெறப்பட்டு செயற்படுத்தப்படவில்லை.
இதனையடுத்தே குறித்த விமான தளத்தை வருமானம் பெறக்கூடிய தளமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மரண அறிவித்தல்