அரசியல் போட்டியால் மக்களின் உயிர்களுடன் விளையாட்டு - பிள்ளையானுக்கு எதிராக மக்கள் போராட்டம்
pillaiyan
batticaloa
people
struggle
sivanesathurai chandrakanthan
By Vanan
நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு (Sivanesathurai Chandrakanthan) எதிராக மட்டக்களப்பு இருதயபுர மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு இருதயபுரத்திலுள்ள கால்வாயை மூடி வீதி அமைப்பதற்கு எதிராகவே நேற்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாரம்பரியமாக காவல்வாய் இருந்த பகுதியில் வீதி செப்பனிடுவதன் காரணமாக கிராமமே நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக ஆர்ப்பாட்டக்கார்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
உடனடியாக குறித்த வீதி செப்னிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் அவ்வாறு நிறுத்தாத பட்சத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அரசியல் போட்டிகாரணமாக பிள்ளையானும் மாநகர ஆணையாளரும் மக்களில் உயிர்களில் விளையாடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி