வீதியோரத்தில் காணப்பட்ட மர்மப்பொருள்! பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவல்
Investigation
Police
Batticaloa
Valaichenai
By Vasanth
மட்டக்களப்பு வாழைச்சேனை முல்லை நகர் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கிளைமோர் ரக வெடிப்பொருள் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீதியில் மர்மப் பொருள் ஒன்று கிடப்பதாக பொலிசாருக்கு இன்று கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிசார் வெடிப்பொருள் என சந்தேகித்து அதனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த வீதியின் அருகாமையில் உள்ள வெற்றுக்காணியில் கடந்த யுத்த காலத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கான பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த காணியினுள் தற்போது கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி