கிழக்கில் மீட்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு!
Investigation
Police
Batticaloa
Vavunativu
By Vasanth
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு ஆற்றுப் பகுதியிலிருந்து சக்திவாய்ந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக குற்றப்புலனாய்வு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுணதீவு ஆற்றுப்பகுதியில் இருந்து நேற்று மாலை இக்கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பாக மாவட்ட நீதவான் நீதிமன்ற சட்ட நடவடிக்கையின் கீழ் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி